Latestமலேசியா

கம்பார் அருகே கோர விபத்து: 10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி

கம்பார், மே-3-பேராக், கம்பார் அருகே வெள்ளிக்கிழமை இரவு 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

ஈப்போ – கோலாலம்பூர் சாலையின் 29.4-ஆவது கிலோ மீட்டர் அருகே, கட்டுப்பாட்டை இழந்த ஒரு பிக்கப் ட்ரக் எதிர்புறம் வந்து கொண்டிருந்த Perodua Bezza மற்றும் Perodua Myvi ஆகிய வாகனங்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் Bezza காரில் பயணம் செய்த Jayden Leong Zhi Yung என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.

காரை ஓட்டிச் சென்ற சிறுவனின் 46 வயது தந்தை மற்றும் 13 வயது சகோதரி பலத்த காயங்களுடன் கம்பார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதேவேளையில், Myvi காரோட்டுநர் மற்றும் பிக்கப் ட்ரக் ஓட்டுநர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர்.

​விபத்தை ஏற்படுத்திய 44 வயது பிக்கப் ட்ரக் ஓட்டுநரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

சோதனையில் அவர் கஞ்சா போதையில் இருந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அவர் மீது சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!