
ஈப்போ , மார்ச் 31 – கம்பார் அரசு மருத்துவமனைக்கு இன்று பிரபல வி.கே.கே ஜவுளி நிறுவன அறவாரியம் 40,000 ரிங்கிட் மதிப்புள்ள இரத்த சுத்திகரிப்பு சாதனத்தை அன்பளிப்பாக வழங்கியது. கம்பார் அரச மருத்துவமனையில் இரத்த சுத்திகரிப்பு செய்வோருக்கு வி.கே.கே அறநிறுவனம் வழங்கிய அந்த சாதனம் பெரும் உதவியாக இருக்கும் என ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் தெரிவித்தார். இம்மாநிலத்தில் போதிய இரத்த சுத்திகரிப்பு சாதனங்கள் இல்லாததால் பலர் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. பலர் அதிக தொகை கொடுத்து வெளியில் இரத்த சுத்திகரிப்பு செய்யும் சூழ்நிலையினால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த வேளையில் வீ். கே. கே. நிறுவன அறவாரியத்தின் இந்த உதவிக்கு பேரா அரசாங்கத்தின் சார்பில் சிவநேசன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இதனிடையே சிறு நீரக கோளாரினால் பலர் அவதியுற்று வருகிறார்கள் , அதற்கு உதவும் பொருட்டு இது வரை வீ. கே. கே. நிறுவன அறவாரியம் இது வரை நான்கு இரத்த சுத்திகரிக்கும் சாதனங்கள் வழங்கியுள்ளதாக வி.கே.கே நிறுவன அறவாரிய இயக்குனர் கலா பாலசுப்ரமணியம் தெரிவித்தார். இந்த அறவாரியம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் மருத்துவம் , கல்வி , வர்த்தக கடனுதவி மற்றும் வசதி குறைந்தவர்களுக்கு நிதி உதவிகள் போன்றவை வழங்கப்பட்டு வருவதாகவும் கலா தெரிவித்தார்.