
ஈப்போ, அக்.08-இன்று அதிகாலை பேரா, Kampung Gajah, Kampung Teluk Sareh பகுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில், இரண்டு நண்பர்கள் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார். அவ்விபத்தில் அவ்விரு வாகனங்களும் வடிகாலுக்குள் கவிழ்ந்தன.
அதிகாலை 4.29 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். அவ்விபத்தில் Toyota Yariz காரும் Yamaha Y15 மோட்டார் சைக்கிள் சிக்கியதாக அவர் கூறினார்.
உயிரிழந்தவர்கள் 19 வயதான Siti Qazrina Abdul Rahman மற்றும் 18 வயதான Adam Danial Abdul Rahman என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்கள் உறுதி செய்தனர்.
31 வயதான கார் ஓட்டுநர் பலத்த காயமடைந்து, ஆம்புலன்ஸ் மூலம் Seri Iskandar மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மேல்நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. மீட்புப் பணிகள் அனைத்தும் காலை 6.54 மணிக்கு நிறைவடைந்தன.



