Latestஇந்தியாஉலகம்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் வழங்கிய அரசு வேலை நியமனங்கள் – உயர்நீதிமன்றம் இரத்து

மதுரை, ஜூலை-28-கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு தமிழக அரசு வழங்கிய அரசு வேலை நியமனங்களை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அதிரடியாக இரத்துச் செய்துள்ளது.

அரசுப் பணியிடங்களை கருணை அடிப்படையில் அல்லது இழப்பீடாக வழங்க முடியாது என்றும், அவை அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவம் மற்றும் சம வாய்ப்பு கொள்கைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற நியமனங்கள் எதிர்காலத்தில் இதேபோன்ற கோரிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த மாதத் தொடக்கத்தில் கரூர் சென்ற முதல்வர் ஜோசப் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அரசாங்க வேலைக்கான நியமன ஆணையை வழங்கியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசு பிறப்பித்த உத்தரவை இரத்துச் செய்து தீர்ப்பளித்துள்ளது, முதல்வர் விஜயின் த.வெ.க அரசுக்கு பின்னடைவாகக் பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!