Latestமலேசியா

கள்ளக் குடியேறிகள் கடத்தல்: கூரியர் நிறுவன வாகனங்களைப் பயன்படுத்தும் யுக்தி

கோத்தா பாரு, அக்-27-ஆவணமற்ற கள்ளக்குடியேறிகளைச் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்துவதற்கு கூரியர் நிறுவன வாகனங்கள் பயன்படுத்தப்படும் யுக்தியை சமூக ஆர்வலர் ஒருவர் அம்பலப்படுத்தியிருக்கிறார். இத்தகைய நடவடிக்கைகள் பகல் நேரத்தில்கூட வெளிப்படையாக நிகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘Pertubuhan Jejak Jalanan’ அமைப்பின் நிறுவனர் Abbé Hae அழைக்கப்படும் Mohd Azhan Mohd Adnan தமது ஃபேஸ்புக் காணொளியில் அப்புதிய யுக்தி குறித்து விவரித்துள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை Wakaf Che Yeh பகுதியில் தமது குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, வெளிநாட்டினர் என நம்பப்படும் இருவர் கூரியர் நிறுவன வேனை அணுகியதைக் கண்டதாக அவர் கூறினார். பின்னர், அந்த வேனிலிருந்து ஆவணமற்ற கள்ளக்குடியேறி எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் வெளியே வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சாதாரண வாகனங்களைக் காட்டிலும் கூரியர் நிறுவன வாகனங்களைப் பயன்படுத்துவது கடத்தல் நடவடிக்கைகளை மறைப்பதற்கு உதவக்கூடும். மேலும், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் கிட்டத்தட்ட தினமும் நிகழும் வேளை, கடல் வழிகள் மட்டுமின்றி சட்டவிரோதமாகத் தரையிறங்கும் இடங்கள் வழியாகவும் கள்ளக்குடியேறிகள் நாட்டுக்குள் நுழைவதாகவும் அவர் கூறினார்.

Sungai Golokக்கில் இருந்து Tumpatடில் உள்ள தீவுப் பகுதிகளுக்குள் சிலர் நுழைவதாகவும், மேலும் சிலர் கிளந்தான் ஆறு வழியாக Kota Bahriவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தரையிறங்குவதாகவும் Abbé குறிப்பிட்டார். ஒவ்வொரு சம்பவத்திலும் பலர் சம்பந்தப்பட்டிருக்கலாம். எனவே, அவ்விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதுவரை தமது அமைப்பு அச்சம்பவங்கள் தொடர்பாகக் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை எனக் குறிப்பிட்ட Abbé, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டால் பொதுமக்கள் அவற்றைப் பதிவு செய்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், கிளந்தானில் மட்டுமின்றி நாடு முழுவதும் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!