Latestமலேசியா

கவனம் மக்களே: இரவு தாமதமாக உணவு உண்பது கல்லீரலில் கொழுப்பு சேரும் அபாயத்தை அதிகரிக்கலாம்

கோலாலாம்பூர், அக்டோபர்-21,இரவு வெகுநேரம் கழித்து உணவு உண்பது, fatty liver எனப்படும் கல்லீரல் கொழுப்பு நோய் மற்றும் cirrhosis என்றழைக்கப்படும் கல்லீரல் சுருக்கம் ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என புதிய மருத்துவ ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் Oregan சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சுமார் 200,000 பேரின் உணவுப் பழக்கவழக்கங்களை ஆராய்ந்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

அவ்வகையில், இரவு தாமதமாக சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் நோய் ஏற்படும் வாய்ப்பு, முன்னதாகவே சாப்பிடுபவர்களை விட 20 முதல் 30 விழுக்காடு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உடலின் கொழுப்பு மற்றும் சர்க்கரை வளர்சிதை மாற்றத்தை முறைப்படுத்த கல்லீரலுக்கு ஓர் உயிரியல் கடிகாரம் உள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க, உடல், தூக்கத்திற்குத் தயாராகும் நேரத்தில் உணவை உட்கொள்ளும்போது, ஓய்வெடுக்க வேண்டிய கல்லீரல் செரிமான வேலைகளில் ஈடுபட நேரிடுகிறது; இது உடலின் இயல்பான வளர்சிதை மாற்றச் சுழற்சியைப் பாதிப்பதாக ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.

என்றாலும், இரவு நேர உணவை முன்னதாகவே முடித்துக் கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா என்பதை உறுதிச் செய்ய, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அடுத்தகட்ட நேரடிப் பரிசோதனைகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!