
சபா, அக்டோபர் 21 – சபாவிலுள்ள தாவாவ் (Tawau) பகுதியில், இன்று அதிகாலை கார் மரத்தில் மோதிய விபத்தில் 21 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
அதிகாலை 2 மணியளவில், விமான நிலையத்தின் பழைய சுற்றுவட்டச் சாலையான புலாத்தான் ஏர்போர்ட் லாமா (Bulatan Airport Lama) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. பெரோடுவா மைவி (Perodua Myvi) காரை ஓட்டிச் சென்ற பெண், கட்டுப்பாட்டை இழந்ததால் கார் மரத்தில் மோதியது.
இதில், ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்ட பெண் உயிரிழந்த நிலையில், காரில் இருந்த மற்றொரு பயணியும் காயமடைந்தார்.
தாவாவ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படைத் தலைவர் ஜெமிஷின் உஜின் (Jemishin Ujin) தலைமையிலான குழுவினர், அதிகாலை 2.29 மணிக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணிகள் அதிகாலை 3.30 மணியளவில் நிறைவடைந்தன.



