Latestமலேசியா

காணாமல் போன மகளை மீட்க சட்டப் போராட்டம் தொடரும்; கூட்டரசு நீதிமன்றத்தை நாடினார் இந்திரா காந்தி

புத்ராஜெயா, செப்டம்பர்-25-காணாமல் போன தனது இளைய மகள் பிரசானா திக்சாவை மீட்கத் தவறியதற்காக, காவல்துறை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான இழப்பீட்டு வழக்கை மீண்டும் உயிர்ப்பிக்க இந்திரா காந்தி கூட்டரசு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

​முன்னதாக, காவல்துறை, உள்துறை அமைச்சு மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இழப்பீடு கோரி அவர் தாக்கல் செய்த வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு கோரி இந்திரா காந்தி தற்போது கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

​அவரது வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன், பொது நலன் மற்றும் முக்கியச் சட்டக் கோட்பாடுகள் தொடர்பான ஆறு சட்டக் கேள்விகளை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

இந்த மேல்முறையீட்டு அனுமதி மனு மீதான வழக்கு நிர்வாகம் அக்டோபர் 26-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

​கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திராவின் முன்னாள் கணவர் முகமது ரிதுவான் அப்துல்லா, 11 மாதக் குழந்தையான பிரசானா திக்சாவைத் தூக்கிச் சென்றதோடு, மூன்று பிள்ளைகளையும் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றினார்.

உச்ச நீதிமன்றம் அந்த மதமாற்றத்தை ரத்து செய்து, அவரைக் கைது செய்ய 2016-ல் ஆணை பிறப்பித்தும், பல ஆண்டுகளாகியும் குழந்தை இன்னும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!