
பாலிக் புலாவ், ஜூலை 21 – காதல் மோசடி கும்பலுடன் தொடர்புடைய குற்றச் சதியில் ஈடுபட்டதற்காக குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது சீன நாட்டவர்கள் இன்று பாலிக் புலாவ் (Balik Pulç) நீதிமன்றத்தில் ஆஜராகி, குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி, பாயான் லெப்பாஸ் சுங்கை நிபோங் கெச்சிலிலுள்ள Sungai Nibong Kecil) ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றும் நோக்கில் சதித் திட்டம் தீட்டியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
நீதிமன்றம் ஒவ்வொருவருக்கும் 8,000 ஜாமீன் விதித்தது. மேலும், இரண்டு மலேசியப் பிணையாட்களை வழங்க வேண்டும், கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், மாதந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை ஆவணங்கள் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



