Latestமலேசியா

கார் -மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் 7 மாத குழந்தை உட்பட மூவர் மரணம்

ஷா அலாம், மார்ச் 12 – உலு சிலாங்கூர் , புக்கிட் செந்தோசா, Jalan Bunga Kertas சாலை சந்திப்பில் ஒரு காரும் – மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்தில் 7 மாத குழந்தை உட்பட மூவர் மரணம் அடைந்தனர்.

இன்று காலை மணி 9.45 அளவில் நடந்த அந்த விபத்து குறித்த தகவலை தங்களது தரப்பு பெற்றதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan இப்ராஹிம் உசேய்ன்( Ibrahim Husin ) தெரிவித்தார்.

காலை 9 மணிக்கு Taman widuri யிலிருந்து சுங்கை சோவுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்தபோது எதிர்திசையில் வந்த கார் திடீரென வலதுபுறம் திரும்பியதால் தவிர்க்க முடியாத நிலையில் மோட்டார் சைக்கிள் அக்காரில் மோதியது.

விற்பனையாளராக வேலை செய்து வந்த 25 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டியும் காரின் பின்னால் அமர்ந்திருந்த 88 வயதுடைய மூதாட்டியும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்ததனர்.

அக்கார் ஓட்டுனரான 60 வயதுடைய ஆடவரும் , முன்புறம் அமர்ந்திருந்த பெண்ணும் சிறிய அளவில் காயம் அடைந்ததால் அவர்கள் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டனர்.

காரின் பின் இருக்கையில் இருந்த பயணி தூக்கி வைத்திருந்த ஆண் குழுந்தை கடுமையாக காயம் அடைந்ததைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் சுங்கை பூலோ மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!