
கிளாந்தான், ஆகஸ்ட் 17 – கிளாந்தான் தும்பாட்டில், வாஃபக் பாரு மேம்பாலத்தில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 35 வயது ஆடவர் உயிரிழந்துள்ளார்.
கோத்தா பாருவிலிருந்து பெங்காலான் குபோர் நோக்கிச் சென்ற அவர், வளைவில் செல்லும்போது, எரிபொருள் தீர்ந்ததால் சாலையின் இடதுபுற ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புற வலது பகுதியில் மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.
மார்பு பகுதியில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தும்பாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தச் சம்பவம் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



