Latestமலேசியா

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் — லோக்

கோலாலம்பூர், அக்டோபர் 7 – குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி, ஒருவர் காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ, பாதிக்கப்பட்டவருக்கும் அல்லது அவரது குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் (Anthony Loke) கூறுகையில், சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் பறிப்பு ஆகிய தண்டனைகளுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்பையும் குற்றவாளிகள் ஈடு செய்ய வேண்டுமென்றார்.

இழப்பீடு எவ்வளவு வழங்க வேண்டும், அதை எவ்வாறு கணக்கிடுவது மற்றும் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது. இதற்கான சட்டத் திருத்தம் பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மற்றும் காவல்துறை (PDRM) அதிக ஆபத்துள்ள இடங்கள் மற்றும் நேரங்களில் சோதனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். மீண்டும் குற்றம் செய்யும் ஓட்டுநர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் வலுப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!