Latestஉலகம்

தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்: ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறிது நேரம் தடுத்து வைப்பு

டெல்லி, அக்.07-இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்திக்க அனுமதி கோரி டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆகாஷ்வாணி பவன் அருகே நடைபெற்ற போராட்டத்தில், தேர்தல் ஆணையரைச் சந்திக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் காவல் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும் உடன்பாடு ஏற்படவில்லை.

அதனை அடுத்து, சுமார் 8 மணி நேரத்துக்குப் பிறகு போராட்டக் கும்பலை அங்கிருந்து வெளியேற்ற காவர் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். வெளியேற மறுத்த ராகுல் காந்தியை அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வாகனத்தில் ஏற்றியதுடன், பிரியங்கா காந்தி உள்ளிட்ட மற்ற தலைவர்களையும் கைது செய்தனர்.

காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்னதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோரி, நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். அதில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய அலுவலகப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இவ்வேளையில் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இரவு 10 மணிக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!