
கோலாலம்பூர், நவம்பர்-21,புகைப்படப் பதிவுகளுக்குப் புகழ்பெற்ற சமூக வலைத்தளமான இன்ஸ்டகிராம், அதன் பயனர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, இனி இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட _story_ களை, முதல் 15 நிமிடங்களுக்குள் திருத்திக்கொள்ள முடியும்.
இதனை இன்ஸ்டகிராம் தலைவர் Adam Mosseri அறிவித்துள்ளார்.
இந்தப் புதிய வசதியின் மூலம், _story_ களில் உள்ள எழுத்துப் பிழைகளைத் திருத்துவதோடு, இசை, _sticker_ கர்கள் மற்றும் படங்களையும் மாற்றியமைக்கலாம்.
இதுநாள் வரை, ஒருமுறை பதிவிட்ட _story_ யில் ஏதேனும் தவறு இருந்தால், அதனை நீக்கிவிட்டு மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டியிருந்தது.
ஆனால், இப்புதிய வசதியில் _story_ யை நீக்க வேண்டிய அவசியமில்லை.
அதோடு, ஏற்கனவே கிடைத்த _views_ , _likes_கள் மற்றும் _comments_ களும் நீக்கப்படாது.
இதற்காக, பதிவிட்ட _story_ யில் வலப்பக்கத்தின் கீழ் உள்ள 3 புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, ‘Edit Story’ என்ற வசதியைப் பயன்படுத்தலாம்.
திருத்தப்பட்ட _story_ களில் ‘Edited’ என்ற அடையாளமும் இடம்பெறும்.
என்றாலும், இந்தப் புதிய வசதி படிப்படியாகவே பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



