Latestவிளையாட்டு

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா உட்பட 7 நாடுகள் போட்டி — சர்வதேச ஒலிம்பிக் குழு

பெர்லின், அக்டோபர் 7 – 2036ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா, ஜெர்மனி, கத்தார் உள்ளிட்ட 7 நாடுகள் போட்டியிடுகின்றன என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் ஹங்கேரி, துருக்கி, தென்னாப்பிரிக்கா மற்றும் தென் கொரியாவும் இடம்பெற்றுள்ளன. போட்டியை நடத்த விரும்பும் நாடுகளின் இறுதிப் பட்டியல் 2027ஆம் ஆண்டு தயாரிக்கப்படும்.

இந்நிலையில் இந்தியா இதுவரை ஒலிம்பிக் போட்டியை நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளை, கத்தார், முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட முதல் நாடாக ஒலிம்பிக் போட்டியை நடத்த முயற்சிக்கிறது.

2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) ஒலிம்பிக் போட்டியையும், 2032ஆம் ஆண்டு பிரிஸ்பேன் (Brisbane) ஒலிம்பிக் போட்டியையும் நடத்தவுள்ள நிலையில், 2036ஆம் ஆண்டுக்கான போட்டியை நடத்தும் நாட்டை 2029ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!