Latestமலேசியா

லாவோஸில் பறிமுதல் செய்யப்பட்ட 521 கிலோ போதைப்பொருள் மலேசியாவிலிருந்து வந்ததல்ல – மலேசிய காவல்துறை

கோலாலம்பூர், அக்டோபர் 7 – லாவோஸில் தனியார் விமானத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 521 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் மலேசியாவிலிருந்து வந்ததல்ல என்று மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் (Hussein Omar Khan) கூறுகையில், விமானம் சுபாங் விமான நிலையத்திலிருந்து (Lapangan Terbang Subang) லாவோஸின் லுவாங் பிரபாங் (Luang Prabang) நகருக்கு எந்தச் சரக்குமின்றி சென்றது. லாவோஸ் சென்ற பின்னரே போதைப்பொருள் விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

மொத்தம் 500 பொட்டலங்களிலிருந்த இந்த 521 கிலோ போதைப்பொருள், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு (Manila) கடத்தப்படவிருந்ததாக நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு மலேசியர் உட்பட 13 பேர் லாவோஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிய மலேசிய காவல்துறை லாவோஸ் அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!