
கோத்தா திங்கி, ஆக 24 – கோத்தா திங்கி, Felda Air Tawar ரில் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் அடிக்கடி வருவதைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் கும் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனனர். இதற்கு முன் செம்பனை தோட்டங்களில் அடிக்கடி காணப்பட்ட யானைகள் தற்போது தங்களது குடியிருப்பு பகுதிகளில் ஊடுருவி காய்கறிகள் மற்றும் செடிகள் உட்பட பல்வேறு பொருட்களையும் சேதப்படுத்தி வருவதாக Felda Air Tawar மக்கள் கூறுகின்றனர். யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுப்பதற்கு பூங்கா மற்றும் வனவிலங்கு துறை அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட வேண்டுனெ குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.