ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-16, ஆண்டுக் கணக்கில் குடும்ப உறுப்பினர்களின் கார் பதிவு எண்கள் மீது பந்தயம் கட்டி வந்த ஓய்வுப் பெற்ற குத்தகையாளர், Toto 4D Jackpot-டில் 21.3 மில்லியன் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.
பினாங்கைச் சேர்ந்த 64 வயது அம்முதியவர், 5841, 1562 என இரண்டு நான்கு இலக்க எண்களை ஆண்டுக் கணக்கில் எழுதி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி இரட்டை மகிழ்ச்சியாக, அவ்விரு எண்களும் Toto 4D குலுக்களில் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களில் வந்து, ஒரே நாளில் அவரை கோடீஸ்வரராக்கின.
அதை பார்த்த சந்தோஷத்தில் தமக்கு பேச்சே வரவில்லை என அவர் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
கோடிக்கணக்கில் பரிசுத் தொகைக் கிடைத்திருப்பதால், நிம்மதியான ஓய்வுக் காலத்தை உறுதிச் செய்துக்கொண்டுள்ள அவ்வாடவர், நிலையான வருமானத்திற்காக fixed deposit எனப்படும் நிரந்த வைப்புத் தொகையில் அப்பணத்தைப் போடவிருப்பதாகச் சொன்னார்.
இவ்வேளையில், பின்னாங்கைச் சேர்ந்த இன்னொரு நபர், 9666, 1018 என்ற எண்கள் வாயிலாக 4.4 மில்லியன் பரிசுப் பணத்தை வென்றுள்ளார்.
கார் ஓட்டுநராக வேலை செய்து வரும் தனது கடும் உழைப்புக்கு, தனது கார் தந்த பரிசு அதுவென உருகுகிறார் 39 வயது அவ்வாடவர்.