Latestமலேசியா

‘3SM’ மினி தொடரரை அறிமுகம் செய்து வைத்தார் துணையமைச்சர் யுனேஸ்வரன்

பெட்டாலிங் ஜெயா, மே-23 – மலேசியாவின் பிரபல திரைப்பட இயக்குனர் கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில், UNITAR அனைத்துலகப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு உருவான ஒன்பது அத்தியாயங்களைக் கொண்ட “3SM: 3 சொல்லு மட்டும்தான்” என்ற மினி தொடர் முற்றிலும் iPhone 15 Pro மூலம் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த மினி தொடரை, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் R. யுனேஸ்வரன் ​UNITAR வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.

இம்முயற்சியைப் பாராட்டிய அவர், உள்ளூர் படைப்பாற்றல் துறைக்கு இத்தொடர் மேலும் ஊக்கமளிக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதில் UNITAR துணை வேந்தர் தான் ஸ்ரீ Dr Sahol Hamid Abu Bakar-ரும் தொடரின் நடிகர்-நடிகைகளும் பங்கேற்றனர்.

அவர்களில் லோக வர்மன், தர்ஷாமினி கேசவன், தியா லக்ஷனா, சூரியன் மகேசன், ருவேலா, சுபத்ரா, தாரணி, ரத்னகௌரி உள்ளிட்டோர் அடங்குவர்.

​ஆச்சரியம் என்னவென்றால், இதன் மொத்த தயாரிப்பு செலவு இருநூறு ரிங்கிட்டுக்கும் குறைவுதான்.

வெறும் 50 ரிங்கிட் மதிப்புள்ள wireless microphone மற்றும் 99 ரிங்கிட் filter set ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

​மலேசிய இந்தியப் படைப்பாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெரிய பட்ஜெட்டுக்காகக் காத்திருக்காமல், தங்களின் டிஜிட்டல் படைப்பாற்றலை உடனே வெளிப்படுத்த ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என ஷாமளன் கூறினார்.

இந்த மினி தொடரின் புதிய அத்தியாயங்கள், ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு SCIFILM மற்றும் UNITAR YouTube பக்கங்களில் ஒளிபரப்பாகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!