Latestமலேசியா

29 ஆண்டுகள் ஆகிவிட்ட எவரெஸ்டை வென்ற மலேசியா: மோகனதாஸ் பெருமிதம்

கோலாலம்பூர், மே-23 – இன்று, மே 23-ஆம் தேதி… மலேசிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு மிக முக்கியமான நாளாகும்.

ஆம், மலேசிய எவரெஸ்ட் குழுவினர் உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து இன்றோடு 29 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

​1997-ஆம் ஆண்டு இதே நாளில், டத்தோ எம். மகேந்திரன் மற்றும் டத்தோ என். மோகனதாஸ் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக வென்ற முதல் மலேசியர்கள் மற்றும் முதல் தென்கிழக்காசியர்கள் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தனர்.

​இந்த 29-ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்புதான், அதாவது மே 18-ஆம் தேதியன்று, மலேசிய மலையேறும் வீரர் Kicok எனப்படும் Mohd Hafiz Bachok எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து அசத்தியுள்ளார்.

இதன் மூலம், எவரெஸ்ட் சிகரத்தை வென்ற 30-ஆவது மலேசியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

​29 ஆண்டுகள் கடந்தாலும், அன்று 1997-ல் நம் தேசியக் கொடியை மகேந்திரனும் மோகனதாஸும் எவரெஸ்ட் உச்சியில் ஏற்றித் தொடங்கிய அந்த ‘Malaysia Boleh’ உத்வேகம், இன்றும் எதிர்கால மலேசியத் தலைமுறையினருக்கும் ஒரு பெரும் வழிகாட்டியாகத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!