
ஜார்ஜ்டவுன், ஜூலை-7-மலேசிய தேசிய நூலகத்தின் வாயிலா, பினாங்கு பொது நூலகக் கழகத்துடன் இணைந்து, 2026 ஆசியான் புத்தக விழா மற்றும் ஒற்றுமைக் கையெழுத்துக் கலை விழாவை தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.
பினாங்கு Waterfront மாநாட்டு மையத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி நேற்று வரை அந்நிகழ்வு நடைபெற்றது. இதனை பினாங்கு மாநில ஆளுநர் Tun Dato Seri Utama Haji Ramli Ngah Talib தொடக்கி வைத்தார்.
அவ்விழா வாசிப்புக் கலாச்சாரத்தையும் புத்தகத் துறையையும் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், எழுதும் கலையை நாகரிகத்தின் பாரம்பரியமாகவும், அடையாளத்தின் சின்னமாகவும், சமூக ஒற்றுமைக்கான ஓர் ஊடகமாகவும் உயர்த்தும் நோக்கிலான முன்னெடுப்பாகும்.
தரமான வாசிப்புப் பொருட்கள் கிடைக்கூடிய நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், அறிவுக் கலாச்சாரத்திற்குப் புத்துயிர் அளிக்கவும், கற்றலை ஊக்குவிக்கவும், உள்ளூர் புத்தகத்துறையை மேம்படுத்தவும் ஒரு தளமாக, அவ்விழா அமைவதாக ஒற்றுமைத்துறை அமைச்சர் Datuk Aaron Ago Dagang தமது வரவேற்புரையில் தெரிவித்தார்.
அதே வேளை, மலேசியாவின் பல்லின சமூகத்தின் நல்லிணக்கத்தின் பின்னணியில் பெரும் முக்கியத்துவத்தை உணர்த்த அத்தகைய உதவுகிறது. மலேசியாவின் பல்வேறு கலாச்சாரங்களின் எழுத்துக் கலையின் அழகை சமூகம் அங்கீகரித்து பாராட்டுவதற்கான தளமாக இது இருப்பதாகவும் அவர் சொன்னார்.
அந்நான்கு நாள் நெடுகிலும், புத்தகம் சார்ந்தத உரைகள், புதிய புத்தக வெளியீடுகள், இலக்கவியல் கலை உரையாடல்கள், கையெழுத்துக் கலைக் கண்காட்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், கைவினைப் பொருட்கள் கண்காட்சி, ஆசியான் சிறுவர் ஆடை அலங்காரப் போட்டி, 70 விழுக்காடு வரை தள்ளுபடியுடன் கூடிய புத்தக விற்பனை, ரஹ்மா விற்பனை மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கல்கள் போன்ற பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடத்தப்பட்டன.



