குபாங் பாசு, செப்டம்பர் 4 – குபாங் பாசு வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில், ஹினோ (Hino) ரக லோரி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளதானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் காயமடைந்தனர்.
இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், முதலில் விபத்துக்குள்ளான லோரியில் நான்கு பேர் சிக்கிக் கொண்டிருந்ததை கண்டனர்.
விரைந்து ஒரு வெளிநாட்டவர் உட்பட மற்ற மூவர் காயங்களுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டபோதிலும் நான்காவது ஆடவர் லோரியில் துர்தஷ்டவசமாக உயிரிழந்தார்.
குறுகிய மற்றும் நீர் நிறைந்த இடம் காரணமாகப் பாதிக்கப்பட்ட அனைவரையும் லோரியிலிருந்து அகற்றுவதில் மீட்புக் குழுவினர் சிரமத்தை எதிர்நோக்கியதாக ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் புஸ்டன் கருடின் (Bustan Karudin) தெரிவித்தார்.