Latestமலேசியா

குற்றக் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாக 9 பேர் மீது குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி, அக்-22-‘Geng Suria’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாக ஒன்பது பேர் மீது கெடா, சுங்கை பட்டாணி sesyen நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

Thayalan, (28), A. Tana Balan (30), Rizwan Abd Jalil (28), G. Sritharan (39), B. Saranraj (38), A. Simon (34), G. Suria Prasad (30), A. Suresh (52), Kavines (31) ஆகியோரே அவர்கள். அவர்களில் G. Suria Prasad அக்கும்பலின் தலைவராகச் செயல்பட்டதாக நம்பப்படுகிறது. வெவ்வேறு நீதிமன்ற அறைகளில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தமிழில் வாசிக்கப்பட்டன. அவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், அவர்களிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், Pekan Lama, Jalan Sekeratட்டில் உள்ள ஓர் எண்ணிடப்படாத வீட்டில் செயல்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டத்தின் 130V(1) பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

ஒன்பது பேருக்கும் பிணை மறுக்கப்பட்டது. அவ்வழக்கு நவம்பர் 17ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!