
சைபர்ஜெயா, ஜூலை.21-Barisan Nasional, Perikatan Nasional, Gabungan Parti Sarawak (GPS) மற்றும் Gabungan Rakyat Sabah (GRS) ஆகியவற்றின் தலைவர்கள் இன்று சந்தித்ததாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi மறுத்திருக்கிறார்.
அத்தகைய சந்திப்பு எதுவும் நடந்ததாகத் தமக்குத் தெரியாது என்று கூறிய BN தலைவருமான Zahid, 16-வது பொதுத் தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தங்கள் கூட்டணி தொடர்ந்து உறுதியுடன் இருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
அம்னோ கட்சியின் நிலைப்பாடு அதன் பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணக்கமாகவே உள்ளது. பொதுக் கூட்டத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை. அதன் முடிவை முழுமையாக மதிக்கிறோம். எனவே, யாரும் கவலைப்படத் தேவையில்லை என அம்னோ தலைவருமான Zahid கூறினார்.
BN, Perikatan, GPS மற்றும் GRS தலைவர்கள் இன்று பிற்பகல் 2 மணிக்குக் கூட்டாகச் செய்தியாளர் சந்திப்பை நடத்தவிருப்பதாகச் முன்னதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இருப்பினும், பெயர் குறிப்பிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டிய அச்செய்திகள், பத்திரிகையாளர் சந்திப்பின் நோக்கம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.



