
கூலிம், செப்டம்பர் 15 – கெடா, கூலிம் ஹைடெக், தாமான் தீராம் (Taman Tiram, Kulim Hi-Tech ) பகுதியில் நேற்று இரவு 32 வயதுடைய எஸ். ஷீலா எனும் பெண், கணவரால் 13 முறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட அப்பெண் இதுவரை தனது குடும்ப பிரச்னையைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை என்று அவருடைய நெருங்கிய உறவினரான கொடிமலர் கூறியுள்ளார்.
கூலிம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பெரின்தென்டன் சியாம்சுல் சின்ரிங் (Superintendan Syamsul Sinring) கூறுகையில், 43 வயது சந்தேக நபர் தனது 39 வயது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பொறாமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென நம்பப்படுகிறது.
சந்தேக நபர் இரவு 8.40 மணியளவில் லுனாஸ் காவல் நிலையத்தில் சரணடைந்ததுடன், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மடிக்கத்தியையும் ஒப்படைத்தார். குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பெண் இரவு 9.30 மணியளவில் உயிரிழந்தார்.
இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



