Latestமலேசியா

கெப்போங் தாமான் எஹ்சானில் தீ விபத்து; 5 வீடுகள் பாதிப்பு – 53 வயது ஆடவர் கருகி மரணம்

கோலாலம்பூர், ஏப்-30- இன்று அதிகாலை, தாமான் எஹ்சான் கெப்போங்கில் ஐந்து வரிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் கருகி மரணம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அதிகாலை மணி 2.30க்கு தமக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், சுமார் 20 நிமிடங்கள் கழித்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றடைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் (Ahmad Mukhlis Mukhtar) தெரிவித்தார்.

அதிகாலை மணி 4.29க்கு 53 வயதான உள்ளூர் ஆடவர் ஒருவரின் உடல் படுக்கையறையில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஹூண்டாய் கெட்ஸ் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்ஜி 250 ஆகிய இரண்டு வாகனங்களும் எரிந்து நாசமாகின.

ஒரு வீடு முற்றிலுமாக அழிந்துவிட்டதோடு, மற்ற வீடுகள் 20 முதல் 80 விழுக்காடுவரை சேதமடைந்ததாக அகமட் முக்லிஸ் முக்தார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!