Latestமலேசியா

கேங் ரமேஸ் தலைவன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்

கெடாவில் செயல்பட்டு வந்த “கேங் ரமேஸ்” குற்றக் கும்பலின் தலைவனான 37 வயது ரமேஷ் கோவிந்தராஜன் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்.

2024 முதல் 2025 வரை அந்த திட்டமிடப்பட்ட குற்றக் கும்பலில் உறுப்பினராக இருந்த ரமேஷ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு  5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

ரமேஷ் கடந்த மே மாதம் தாய்லாந்திலிருந்து இந்தியா செல்லும் விமானத்தில் கைது செய்யப்பட்டான். அவனைக் கைது செய்ய மலேசிய போலீசார் முன்பே வாரண்ட் பிறப்பித்திருந்ததுடன், இன்டர்போல் ரெட் நோட்டீஸும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ரமேஷ் அலோர் ஸ்டார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான். முன்பு, இந்த கும்பலுடன் தொடர்புடைய 20 பேரும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!