
பந்திங், ஆகஸ்ட் 13 – குவாலா லாங்காட், பந்திங்கிலுள்ள செம்பபனைத் தோட்டத்தில் 49 வயது ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டு ஆடவர்களும் ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
20 முதல் 70 வயதிற்குட்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களான அந்த எட்டு பேரும், விசாரணைக்கு உதவும் வகையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குவாலா லாங்காட் மாவட்ட காவல்துறை தலைவர் சுப்ரின்தெண்டன் அக்மல்ரிஸால் முகமட் ராட்ஸி (Superintendan Akmalrizal Mohd Radzi) தெரிவித்தார்.
தோட்ட உபகரணங்கள் மற்றும் செம்பனைப் பழங்கள் திருடப்பட்ட சம்பவமே கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை புதிய கைது எதுவும் இடம்பெறவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



