கொல்கத்தா, நவம்பர் -23, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனைக் கழிவறையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை, நாய் கவ்விச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டு அதை அம்பலப்படுத்தியுள்ளார்.
நவம்பர் 18-ஆம் தேதி திடீர் வயிற்று வலியால் இளம் பெண் ஒருவர் புறநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது கழிவறைக்குச் சென்ற அப்பெண்ணுக்கு ஆறு மாத குறைப்பிரசவத்தில் குழந்தைப் பிறந்தது.
ஆனால் பிறந்த பச்சிளங்குழந்தையை, மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திருந்த நாய் கவ்விச் சென்றது.
குடும்பத்தார் விரட்டிப் பிடிப்பதற்குள் நாய் ஓடிச் சென்று மறைந்து விட்டது.
இந்நிலையில் பல முறை உதவிக்கு அழைத்தும் மருத்துவமனை ஊழியர்கள் வரவில்லையென அப்பெண்ணின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.
அச்சம்பவம் குறித்து விசாரிக்கப்படுமென மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.