
கொல்கத்தா, ஜூன் 4 – இந்தியா கொல்கத்தாவிலுள்ள சுரேந்திரநாத் கல்லூரியின் மாணவர் சங்க அறையில், பருவமழைக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சுத்தம் செய்யும் பணியின்போது இரண்டு சூட்கேஸ்களில் கரையான் சேதப்படுத்திய 1 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணக்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மீட்கப்பட்ட பணத்தில் பெரும்பாலும் 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவை நீண்டகாலமாக வைக்கப்பட்டிருந்ததால் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு ரூபாய் 1 கோடிக்கும் மேல் இருக்கலாம் என கூறப்படுவதால், அந்தப் பெரிய தொகையை கல்லூரி வளாகத்தில் யார் வைத்தது, எதற்காக வைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அரசியல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.



