கோம்பாக், செப்டம்பர் -6, சிலாங்கூர், கோம்பாக் டோல் சாவடி அருகே வேகமாக செலுத்தப்பட்டு, மோட்டார் சைக்கிளை மோதிய வெள்ளை நிற வேன் போலீசாரால் தேடப்படுகிறது.
வைரலான அச்சம்பவம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி காலை 11.50 மணியளவில் நிகழ்ந்திருப்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
அதில் வேனால் மோதப்பட்டு கீழே விழுந்த மோட்டார் சைக்கிளோட்டியான 21 வயது பெண்ணுக்கு, கை, கால்கள், நெஞ்சு, தோள், தாடை போன்ற இடங்களில் காயமேற்பட்டது.
மோதி விட்டு தப்பியோடிய வேன் ஓட்டுநரை 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்க ஏதுவாக போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருப்பின், போலீசை தொடர்புக் கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.