Latestமலேசியா

கோலாலம்பூர்,அம்பாங்கில் திடீர் வெள்ளம்; வாகனங்களில் சிக்கிய மூவர் மீட்பு!

அம்பாங், செப்டம்பர்-21,கனமழையைத் தொடர்ந்து கோலாலம்பூர் மற்றும் அம்பாங்கின் பல பகுதிகளில் நேற்று மாலை திடீர் வெள்ளமேற்பட்டது.பல வீடமைப்புப் பகுதிகளில் வெள்ளம் புரண்டோடடியது.

அதில் மூழ்கிய இரு கார்களில் சிக்கித் தவித்த மூவரை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

​அம்பாங், Jalan Mengkudu-வில் சுமார் ஒரு மீட்டர் ஆழ வெள்ள நீரில் சிக்கிய வாகனத்திலிருந்து ஒருவர் மீட்கப்பட்டார்.

​மற்றொரு சம்பவத்தில், கோலாலம்பூர், Taman U-Thant-னில் உள்ள டேசா அங்காசா அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே 60 சென்டிமீட்டர் ஆழ நீரில் மூழ்கிய BMW காரில் சிக்கிய இருவர் துரிதமாக மீட்கப்பட்டனர்.

​இதனிடையே, அம்பாங், Ukay Perdana Heights-சில் வெள்ளம் சூழ்ந்த வீட்டொன்றில், வெள்ள நீரில் மின்சாரம் பாய்ந்திருக்கலாம் என்ற அச்சம் காரணமாக விடுக்கப்பட்ட அவசர அழைப்பையும் ஏற்று தீயணைப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

எனினும் ​இந்தச் சம்பவங்களில் எவருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!