பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 15 – லோரி ஓட்டுனர் ஒருவருக்கு எதிராக, போலீஸ் அதிகாரி ஒருவரின் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளி அவரை கொலை செய்ய முயன்றது உட்பட போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான இரு குற்றச்சாட்டுகள் இன்று வெகிரி செம்பிலான், கோலா பிலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.
எனினும், 21 வயது முஹமட் ஹஸ்ருல்னிசாம் ஹசிம் எனும் அவ்வாடவன் தமக்கு எதிரான அக்குற்றங்களை மறுத்து விசாரணை கோரினான்.
ஆண் போலீஸ் அதிகாரியின் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளி அவருக்கு மரணம் விளைவிக்க முயன்றதாக, அவ்வாடவனுக்கு எதிராக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் ஒன்பதாம் தேதி, வண்பகல் மணி 12.30-க்கும் பிற்பகல் மணி 1.15-க்கும் இடைப்பட்ட வேரத்தில், ஜெம்போல், ஜாலான் செர்டிங் தெங்கா – கெராடோங்கில் அவன் அக்குற்றத்தை புரிவ்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படலாம்.
அதே வாள், லோரிய அபாயகரமான முறையில் செலுத்தி, போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தை விளைவித்ததாக, இரு போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகளையும் அவன் எதிர்வோக்கியுள்ளான்.
அக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், பத்தாயிரம் ரிங்கிட் வரையிலான அபராதமும், 12 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
18 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் அவன் இன்று விடுவிக்கப்பட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை மே ஆறாம் தேதி செவிமடுக்கப்படும்.