Latestமலேசியா

சண்டாக்கான் மின்தூக்கியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிய மூதாட்டி சோர்வடைந்த நிலையில் மீட்பு

சண்டாக்கான், செப்டம்பர்-29,சபா, சண்டாக்கானில் உள்ள ஸ்ரீ இண்டா அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கியிருந்த 63 வயது மூதாட்டி ஒருவர், மயக்கமுற்று பலவீனமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

​நேற்றிரவு சுமார் 7 மணியளவில் ஏற்பட்ட மின்தடை காரணமாக அந்த மூதாட்டி மின்தூக்கியில் சிக்கிக்கொண்டதாக நம்பப்படுகிறது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், மின்தூக்கி பராமரிப்பாளர்களின் உதவியுடன் இரவு 8.14 மணியளவில் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

​சிறப்பு உபகரணங்கள் மூலம் மின்தூக்கியின் கதவுகள் திறக்கப்பட்டபோது, காற்றுப் போதாமையால் அந்த மூதாட்டி சுயநினைவை இழக்கும் அளவுக்கு பலவீனமடைந்து கிடந்தது தெரியவந்தது.

​மீட்கப்பட்ட மூதாட்டிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

அப்பகுதியில் பாதுகாப்பு உறுதிச் செய்யப்பட்ட பின்னர், இரவு 8.35 மணியளவில் மீட்பு நடவடிக்கை நிறைவுற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!