Latestமலேசியா

சபா கூனாக் நகரில் இளைஞர்கள் மோதல்: 12 பேர் கைது

சபா, அக்டோபர் 19 – சபா, கூனாக் (Kunak) நகரிலுள்ள பொது மைதானத்தில் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 12 இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த மோதல் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, நேற்று இரவு சுமார் 8 மணியளவில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் 12 இளைஞர்களும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

கூனாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பிரிண்தெண்டன் ரெஜாலி அக் அங்கோங் (Rejali Ak Angong) இதனைத் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக, பொது இடத்தில் கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.

மேலும், விசாரணைக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, சம்பவம் குறித்து ஆதாரமற்ற தகவல்களையும் ஊகங்களையும் பரப்ப வேண்டாமெனப் பொதுமக்களிடம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் கூனாக் மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தைத் தொடர்புகொண்டு உதவுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!