கூச்சிங், செப்டம்பர் -19, சரவாக், பிந்துலுவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 6 வயது பேத்தி தாத்தாவின் கண்ணெதிரிலேயே முதலைக்கு இரையானாள்.
அத்துயரச் சம்பவம் Tatau, Kambung Seberang Lama செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து Tatau தீயணைப்பு மீட்புத் துறையின் 6 பேர் கொண்ட குழு சம்பவ இடம் விரைந்தது.
தன் கண் முன்னே முதலை பேத்தியை இழுத்துச் சென்றதாக அம்முதியவர் தெரிவித்தார்.
இதையடுத்து Jetty மற்றும் ஆற்றங்கரை சுற்றிலும் அந்த இரவிலேயே தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
எனினும் இதுவரை அச்சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை.