Latestமலேசியா

சர்ச்சைப் பதிவு: ‘Instagram பெண்களுக்கானது’ – இலோன் மாஸ்க்கின் கருத்துக்கு இணையவாசிகள் கடும் கண்டனம்

வாஷிங்டன், மே-18-உலக மகா கோடீஸ்வரர் இலோன் மாஸ்க், Instagram செயலி ‘பெண்களுக்கானது’ எனக் கூறிய கருத்து, உலகளவில் இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

​சமூக ஊடகப் பயன்பாட்டுப் பழக்கவழக்கங்கள் குறித்த ஒரு விவாதக் காணொளிக்குத் பதிலளித்த மாஸ்க், ‘Instagram பெண்களுக்கானது’ என்று பதிவிட்டார்.

அதோடு நிறுத்தாமல், “சில சமயம் வளர்ந்த ஆண்கள் தங்களின் Instagram பக்கங்களை எனக்கு அனுப்பும்போது, நீங்கள் பாலின மாற்றம் செய்துகொள்ளப் போகிறீர்களா என்று நினைக்கத் தோன்றுகிறது” என அவர் பதிவிட்ட கூடுதல் கருத்து சர்ச்சையை மேலும் விஸ்வரூபமாக்கியுள்ளது.

​இலோன் மாஸ்க்கின் இந்த கருத்துக்கள் பெண் வெறுப்பு மற்றும் பாலின பாகுபாடு தன்மையைக் காட்டுவதாக வலைத்தளவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உலகளவில் Instagram செயலியை ஆண்கள் மற்றும் பெண்கள் சம அளவில் பயன்படுத்தி வரும் வேளையில், மாஸ்க்கின் இந்த கருத்து தேவையற்றது எனப் பலர் சமூக வலைத்தளங்களில் சாடி வருகின்றனர்.

கொஞ்சம் காலம் சர்ச்சையிலிருந்து ஒதுங்கியிருந்த ​X தளத்தின் உரிமையாளரான இலோன் மாஸ்க்கின் இந்த அதிரடிப் பதிவு, இன்றையைப் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!