Latestசிங்கப்பூர்

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 101 வனவிலங்குகள் பறிமுதல்

சிங்கப்பூர், செப்டம்பர் 17 – சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 101 வனவிலங்குகளை தேசிய பூங்காக்கள் வாரியமான NParks பறிமுதல் செய்துள்ளது. அவற்றில் 13 உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், உயிருடன் இருந்த பல விலங்குகளும் மோசமான உடல்நிலையில் காணப்பட்டன.

திங்கட்கிழமை குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல்லிகள், நியூட்கள் (Newt), மலைப்பாம்புகள், டரான்டுலாக்கள் (Tarantula) மற்றும் ஆமைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் சிங்கப்பூரில் சட்டப்படி விற்பனை செய்யவோ, செல்லப்பிராணிகளாக வளர்க்கவோ அனுமதிக்கப்படாத வெளிநாட்டு இனங்களாகும்.

மீட்கப்பட்ட உயிரினங்களில் ஒரு சிறுத்தைப் பல்லியின் கண் காயமடைந்து தொற்று ஏற்பட்டிருந்ததுடன், அதன் தோலை முழுமையாக உரிக்க முடியாத நிலையில் இருந்தது. மோசமான பராமரிப்பு காரணமாக நீண்டகாலமாக அவை சிறையில் வைக்கப்பட்டிருந்திருக்கலாமென NParks தெரிவித்துள்ளது. அந்தப் பல்லி, விலங்கு நலன் கருதி கருணைக்கொலை செய்யப்பட்டது.

உயிருடன் மீட்கப்பட்ட விலங்குகள் தற்போது வனவிலங்கு மறுவாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, சட்டவிரோதமாக வனவிலங்குகளை வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்த ஆறு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!