Latestமலேசியா

சிரம்பானில் 10 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது

சிரம்பான், செப்டம்பர் -5, நெகிரி செம்பிலான் சிரம்பானில் 10 வயது சிறுவன் ஓட்டிய கார் 2 வாகனங்களை மோதி விபத்துக்குள்ளானது.

Taman Arowana Impian, Jalan Arowana 2-ல் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

அச்சிறுவன் ஓட்டிய காரில் மேலுமொரு 9 வயது சிறுவன் உடனிருந்துள்ளான்.

எனினும் அவ்விபத்தில் எவருக்கும் காயமமேற்படவில்லை.

சிறுவன் ஓட்டி வந்த Toyota Corolla அவனது தந்தைக்குச் சொந்தமானதாகும்;

உடனிருந்த சிறுவன் பக்கத்து வீட்டு பையன் என போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.

இது போன்று பிள்ளைகளிடத்தில் கவனக்குறைவாக இருக்காதீர் என மீண்டும் நினைவுறுத்திய போலீஸ், பிள்ளைகளின் செயலுக்கு பெற்றோர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமென எச்சரித்தது.

அச்சம்பவம், 2001 சிறார் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!