
கர்நாடகா, ஜூலை 31 – நகைக் கடையொன்றில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் திடீரென மாயமானதால், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கதவு உடைக்கப்படவில்லை… சந்தேக நபரும் இல்லை… ஆனால் நகைகள் மட்டும் காணாமல் போயின!
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோதுதான் காத்திருந்தது அதிர்ச்சி.
காரணம் திருடியது மனிதன் அல்ல அது எலி என்று
அதிகாலை நேரத்தில் சிறிய எலி ஒன்று நகைகளை ஒவ்வொன்றாக இழுத்துச் செல்வது அந்தக் காணொளியில் பார்க்கமுடிகிறது.
எலியின் வளையிலிருந்து அனைத்து நகைகளும் மீட்கப்பட்ட நிலையில் நகைகளில் கட்டப்பட்டிருந்த காகித விலைப்பட்டைகளைக் கடிக்க முயன்றபோது, நகைகளையும் சேர்த்து எடுத்துச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதனிடையே 10 லட்சம் ரூபாய் நகைகளைத் தூக்கிய இந்த ‘குட்டித் திருடன்’, இறுதியில் சிசிடிவியிடம் மட்டும் தப்பிக்க முடியவில்லையே என வலைத்தளவாசிகள் நகைச்சுவையாக கருத்து பதிவிட்டுள்ளனர்.



