
கோலாலம்பூர், ஜூலை.31- மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், முதுகு மற்றும் இடுப்பில் தசை மற்றும் எலும்பு வலிக்காக தொடர் சிகிச்சையை மேற்கொள்ளவிருப்பதாக இஸ்தானா நெகாரா அறிவித்துள்ளது.
உடல் நலம் தேறுவதற்கு ஏதுவாக, அடுத்தகட்ட சிகிச்சையை மேற்கொள்ளும் முன் ஓய்வெடுக்குமாறு மருத்துவ நிபுணர்கள் மாமன்னருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதன் காரணமாக புத்ராஜயாவில் Dataran Pahlawan Negaraவில் நடைபெற்ற வீரர்கள் தின அணிவகுப்பு விழாவில் மாமன்னர் கலந்து கொள்ளவில்லை என அது அறிக்கையொன்றில் குறிப்பிட்டது.
அந்த அணிவகுப்பு விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் அவரது துணைவியார் Datuk Seri Dr Wan Azizah Wan Ismailலும் கலந்து கொண்டனர்.
உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail, தற்காப்பு அமைச்சர் Datuk Seri Muhamed Khaled Nordin, ராணுவப் படைத் தளபதி Jeneral Tan Sri Malek Razak Sulaiman, தேசிய காவல் படைத் தலைவர் Tan Sri Mohd Khalid Ismail ஆகியோரும் அவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.



