Latestமலேசியா

சிலாங்கூரில் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்; 10,000-ஐ கடக்கும் இஸ்லாமிய தம்பதிகளுக்கிடையிலான மணமுறிவுகள்

சிலாங்கூர், அக்டோபர்- 15,

சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 10,815 இஸ்லாமிய தம்பதிகளுக்கிடையிலான விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் முக்கியமான காரணங்களாக பொருளாதார சிக்கல்கள் மற்றும் தொடர்பு குறைவு போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநில ‘sharia’ நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டத்தோ முகமட் அடிப் ஹுசைன் (Datuk Mohammad Adib Husain) தெரிவித்தார்.

சில கணவர்கள் தங்கள் மனைவிகள் வேலை செய்து பணம் ஈட்டுவதால் குடும்ப நிதி பொறுப்புகளை புறக்கணிக்கிறார்கள். இதனால் தம்பதிகளிடையே மனக்கசப்பு மற்றும் மோதல்கள் உருவாகி மணமுறிவிற்கு ஆளாகுகின்றனர்.

ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசாமல் தனி தனி வாழ்க்கை வாழ்வதும் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவர் தம்பதிகள் உடனடியாக விவாகரத்துக்காக முன்வராமல், முதலில் மத ஆலோசகர்கள், கவுன்சிலர்கள் அல்லது இமாம்களின் வழிகாட்டுதலைப் பெற்று பிரச்சினைகளைச் சமரசமாக தீர்க்க முயல வேண்டும் என அறிவுறுத்தினா

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!