கோலாலம்பூர், நவம்பர்-14 – சிலாங்கூர் சுற்று வட்டாரங்களில் உணவகங்கள், உடம்புப் பிடி மையங்கள் உள்ளிட்ட 5 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், 39 வெளிநாட்டவர்கள் கைதாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று விடியற்காலை வரை நடந்த சோதனைகளில், உடம்புபிடி தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டையும் குடிநுழைவுத் துறை முற்றுகையிட்டது.
அதிகாரிகளைக் கண்டதும் பலர் மெத்தைகளின் பின்னாலும் படிகட்டுகளிலும் ஓடி ஒளிந்துகொண்டனர்.
இன்னும் சிலர் தப்பியோட முயன்றனர்; ஆனால் அதிகாரிகள் அதை முறியடித்தனர்.
கைதானவர்களில் இந்தோனீசியர்கள், மியன்மார் நாட்டவர்கள், வங்காளதேசிகள், நேப்பாளிகள், தாய்லாந்து மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
அனைவரும் குடிநுழைவுக் குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கப்படவுள்ளனர்.