
சுங்கைப் பட்டாணி, மார்ச் 3 – சுங்கை பட்டாணியிலுள்ள இடைநிலைப் பள்ளியின் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் காயமடைந்தார்.
எனினும் விசாரணையில் இச்சம்பவத்திற்கு பகடிவதை அல்லது குற்றச் செயலுடன் தொடர்பு இல்லையென என்று கண்டறியப்பட்டுள்ளதாக கெடா மாநில கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தாமான் ரியா ஜெயா தேசிய இடைநிலைப் பள்ளியில் மாணவர்களின் சபை கூட்டம் முடிந்த உடனேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த பள்ளியின் A கட்டடத் தொகுதிக்கு கீழே உள்ள பகுதியில் அந்த மாணவர் விழுந்து கிடந்ததை துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கண்டுப்பிடித்தார்.
சம்பவம் நடந்த நேரத்தில் வேறு எந்த நபர்களும் கட்டடத் தொகுதிக்கு மேலே இல்லை என்பதோடு அனைத்து மாணவர்களும் பள்ளி சபை கூடிய இடத்தில் இருந்ததால், பகடி வதை மற்றும் குற்றச் செயல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
அதே வேளையில் இச்சம்பவத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.



