சுங்கை பூலோ, அக்டோபர்-9 – சிலாங்கூர், சுங்கை பூலோவில் உள்ள உணவகமொன்றில் இரு பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ஆடவரை போலீஸ் தேடுகிறது.
சுபாங் பெஸ்தாரியில் நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து நேற்று முன்தினம் 18 வயது இளம் பெண் புகாரளித்தார்.
அப்பெண், தோழியோடு கடையில் அமர்ந்திருந்த போது, உள்ளே வந்த அவ்வாடவர் எதிர் மேசையில் அமர்ந்து தனது கால்சட்டை zip-பைத் திறந்து ஆபாச சைகை புரிந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் கடையிலிருந்து வெளியேறியதாக புகாரில் கூறப்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் விசாரணைக்கு உதவுமாறு சுங்கை பூலோ போலீஸ் கேட்டுக் கொண்டது.