
கோலாலம்பூர், நவம்பர்-4,நாட்டில், கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி, 14 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கோரப்படாத பணம் இருப்பதாக, இரண்டாவது
நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிஸான் தெரிவித்துள்ளார்.
பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் பழைய தொடர்பு விபரங்கள் காரணமாக, பணத்திற்குச் சொந்தமானவர்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தப் பணம் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்றும், தங்களுக்குச் சேர வேண்டிய பணம் இருப்பது குறித்து பலர் அறியாமல் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, பொது மக்கள் தங்களுக்குச் சொந்தமான கோரப்படாத பணத்தைப் பரிசோதித்து, கணக்காய்வாளர் அலுவலகத்தின் eGUMIS இணையத் தளம் மூலம் மீட்டுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 176 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.



