Latestமலேசியா

செமிஞ்சே புக்கிட் புரோகாவில் மலையேற்றத்தின்போது பள்ளத்தில் விழுந்த இளைஞர் மீட்பு

செமிஞ்ஞி, அக்டோபர் 5 – சிலாங்கூர் செமிஞ்ஞியிலுள்ள (Semenyih) புக்கிட் ப்ரோக்காவில் (Bukit Broga), 20 வயதுடைய ஆண் ஒருவர் சுமார் ஐந்து மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து, பலவீனமான நிலையில் மீட்கப்பட்டார்.

நள்ளிரவு 12.56 மணியளவில் சம்பவம் தொடர்பாக அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, செமிஞ்ஞி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அதிகாலை 1.05 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த மீட்புப் படையினர், பள்ளத்தில் விழுந்திருந்த அந்த இளைஞரை அதிகாலை 1.37 மணியளவில் கண்டுபிடித்தனர்.

அவர் பலவீனமான நிலையில் இருந்தபோதிலும், கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லையென சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM Selangor) செயல்பாட்டு உதவி இயக்குநர் அஷ்ருல் ரிஸால் அஸ்பார் (Ashrul Riezal Asbar) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!