Latestமலேசியா

தோம் யாம் உணவகங்களில் 200,000 தாய்லாந்து ஊழியர்களா? ஆதாரமில்லை — குடிநுழைவுத் துறை

கோலாலம்பூர், அக்டோபர் 5 – மலேசியாவிலுள்ள சுமார் 5,000 தோம் யாம் உணவகங்களில் 2 லட்சம் தாய்லாந்து நாட்டவர்கள் பணிபுரிவதாக கூறப்படும் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என்று குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 15ஆம் தேதி நிலவரப்படி, உணவகத் துறையில் பணிபுரிய செல்லுபடியாகும் தற்காலிக வேலை அனுமதி (PLKS) பெற்றுள்ள தாய்லாந்து நாட்டவர்கள் 12,629 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களில் 12,541 பேர் சமையல்காரர்கள். இவர்களில் 7,559 பேர் ஆண்கள், 4,972 பேர் பெண்கள்.

2025ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை, வேலை அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக 2,316 தாய்லாந்து நாட்டவர்கள் குடிநுழைவுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செல்லுபடியாகும் வேலை அனுமதி இல்லாமல் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் மீதும் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!