
செம்போர்னா, அக்- 5 –சீனாவைச் சேர்ந்த 66 வயது சுற்றுப் பயணி ஒருவர், நேற்று சபா, போம் தீவுக்கு அருகே குடும்பத்தினருடன் snockeling செய்து கொண்டிருந்தபோது சுயநினைவை இழந்து உயிரிழந்தார்.
மதியம் 12.30 மணியளவில் அச்சம்பவம் நிகழந்தது. சீனா, Yunnanனைச் சேர்ந்த அம்மூதாட்டி உடல்நிலை சரியில்லை என்றும் தம்மை மீண்டும் படகிற்கு அழைத்துச் செல்லுமாறும் கேட்டுக் கொண்டதாக Semporna காவல் துறைத் தலைவர் Superintendent Tan Hiap Wah தெரிவித்தார்.
படகிற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு சுயநினைவின்றி காணப்பட்ட அவருக்கு CPR சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அது பலனளிக்கவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கையாக அவர் Semporna மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் 10 ஆண்டுகளாக ஆஸ்துமா பாதிப்பைக் கொண்டிருந்த அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
அச்சம்பவம் தொடர்பாக காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வேளையில், நீர் சார்ந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளின்போது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறு சுற்றுலாத் துறை நடத்துநர்களுக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளது.



