
ஜகார்த்தா, ஆகஸ்ட் 4 – இந்தோனேசியா ஜகார்த்தாவில், எட்டு மாத பெண் குழந்தையை அதன் தந்தை சுமார் 20 மில்லியன் இந்தோனேசிய ரூபியா அதாவது சுமார் 4,530 ரிங்கிட்டுக்கு விற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பணத்தில் அவர் புதிய மோட்டார் சைக்கிளும் கைப்பேசியும் வாங்கியதாக கூறப்படுகிறது.
குழந்தையின் தாய், குழந்தை 10 நாட்களுக்கும் மேலாக வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகமடைந்து, ஜூலை 17 அன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். விசாரணைக்குப் பிறகு, 22 நாட்களுக்குப் பின்னர் குழந்தை மீட்கப்பட்டு ஜூலை 29 அன்று தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும், குழந்தையை விற்றதாகக் கூறப்படும் தந்தை அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, பெற்ற 20 மில்லியன் ரூபியா வெறும் கடன் தொகை என விளக்கம் அளித்துள்ளார். தற்போது அவர் மனிதக் கடத்தல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.



